Thursday 8 August 2013

பள்ளர்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறை



திராவிட ஆட்சியாளர்களின், பள்ளர்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறை:

திராவிட கயமைத்தனம்: 1
========================
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பட்டியல் சாதிகளில்

* தேவேந்திர குலத்தான் (17)
* காலாடி (26),
* குடும்பன் (35),
* பள்ளன் (49),
* பள்ளுவன் (50),
* பண்ணாடி (54),
* புலையன் – சேரமார் (59),
* வாதிரியான் (72)

முதலிய பள்ளர் குடிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 1935 இல் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது தொகுக்கப்பட்ட ‘பட்டியல் சாதிகள்’ (Scheduled Caste ) என்ற தலைப்பில் உள்ள 74 சாதிகளில் அகரவரிசை எண் ஒன்பதில் ‘பாண்டியன்’ (9) என்னும் பள்ளர்களின் குடிப்பெயர் இடம் பெற்று இருந்தது.ஆனால் திராவிட சிகாமணிகள் அவர்களது ஆட்சி காலங்களில், ‘காலாடி’ என்பதைக் ‘கல்லாடி‘ என்றும், ‘குடும்பன்’ என்பதைக் ‘குடம்பன்‘ என்றும், ‘பண்ணாடி’ என்பதைப் ‘பன்னாடி‘ என்றும், ‘வாதிரியான்’ என்பதை ‘வாத்திரியான்‘ என்றும் திரித்ததைப் போல ‘பாண்டியன்’ என்பதைப் ‘பாண்டி’ என்றாக்கித் தற்போது ‘பண்டி‘ என்று பொருள்புரிய முடியாதவாறு ஆக்கி வைத்துள்ளனர். (Tamilnadu Public Service Commissioin Instructions pg.18). திராவிட ஆட்சியாளர்களின் தமிழர் அடையாள அழிப்பு வேலைகளில் இதுவும் ஒன்று.

திராவிட கயமைத்தனம்: 2
========================
பட்டியல் சாதிகளில் இடம் பெற்றுள்ள
* ஆதி ஆந்திர’ர்‘(1),
* ஆதி திராவிட’ர்‘(2),
* ஆதி கர்நாடக’ர்‘(3),
* அருந்ததிய’ர்‘(5),
* மோக’ர்‘(43)
முதலிய பிற தேசிப் பெயர்களுக்கெல்லாம் ‘ர்‘ விகுதியும்,

*தேவேந்திர குலத்தா’ன்‘,
*பள்ள’ன்‘
*கடைய’ன்‘
*குடும்ப’ன்‘
*வாதிரியா’ன்‘
முதலிய மண்ணின் மக்கட் பெயர்களுக்கு ‘ன்’ விகுதியும் எனப் பாகுபடுத்தும் திராவிட உத்திகளையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. ‘ர்’ ‘ன்’ விகுதி உயர்வு நவிர்ச்சி, தாழ்வு நவிர்ச்சி என்பதோடு மட்டுமின்றி ,’ன்’ விகுதி ஒருமையைக் குறிக்கும், ‘ர்’ விகுதி பன்மையைக் குறிக்கும். பொதுவாக மக்களை குறிக்கும் வார்த்தை ‘ன்’ விகுதியிட்டு அழைப்பதென்பது இலக்கணப் பிழை மட்டுமின்றி, திராவிடர்களின் தமிழின படுகொலை என்பதையும் எண்ணத்தில் கொள்ள வேண்டும்.

திராவிட கயமைத்தனம்: 3
========================
‘Scheduled Caste’ என்பதற்கு ‘பட்டியல் சாதி’ என்பதே சரியான தமிழ் மொழி பெயர்ப்பு. ஆனால் திராவிட ஆட்சியாளர்களின் வன்மத்தை இங்கே கூர்ந்து கவனியுங்கள். பட்டியல் சாதியினரின் நலத்துறை என்பதற்கு பதிலாக,

* அரிசன நல இலாகா
* தாழ்த்தப்பட்டோர் நலத்துறை
* ஆதி திராவிடர் (பறையர், அரசாணை எண்.817) நலத்துறை
என்றெலாம் பெயரிடுவது மூவேந்தர் மரபினராகிய பள்ளர்களின் வரலாற்றினை மூடி மறைத்து, இம்மக்களை பண்பாட்டு ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கும் விஜயநகர வடுக (திராவிட) வன்மம் என்பது தெளிவாகிறது.


கடுங்கோன் பாண்டிய மள்ளர்.

No comments:

Post a Comment