Monday 12 August 2013

சிந்திப்பதற்கு!



ஒரு வட இந்திய ஊடகவியலாளருடன் வேண்டுகோளுக்கு இணங்க தியாகி இமானுவேல் சேகரனார் சமாதியையும் பசும்பொன் முத்துராமலிங்கம் சமாதியையும் அவர்களிற்கு காண்பிப்பதற்காக அவர்களுடன் நானும் சென்றேன் அந்த அனுபவத்தை சமூக சொந்தங்களுடன் பகிர எண்ணுகிறேன்....

முதலில் யாம் சென்றது எம் குல கடவுள் தியாக தீபம் இமானுவேல் சேகரனாரின் சமாதிக்கு யாருமற்ற இடத்தில அய்யா அமைதியாக உறங்கும் அந்த இடத்தை காண்பித்தேன் அவரும் புகைப்படம் எடுத்துகொண்டு சிலவற்றை அவரது நோட்டில் எழுதிகொண்டார் ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்குள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

அடுத்தாக பசும்பொன் போகலாம் என்றார் எனக்கு தயக்கம் அதை அறிந்துகொண்ட அவர் உங்களை யாரிடமும் நீங்கள் யார் என்று அடையாள படுத்தாமல் எங்களுடன் வந்த சக ஊடகவியலாளர் என்று சொல்லிகொள்ளலாம் வாருங்கள் என்று அன்புகட்டளை இட்டார் அதை ஏற்று அங்கேயும் சென்றேன்... அங்கேயும் புகைப்படங்களை எடுத்துகொண்டு நோட்டில் பலவற்றை குறித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது ஆம் அவர்களின் ஆதிக்க புத்தியை முத்துராமலிங்கத்தின் சமாதி பிரதிபலித்தது...

முறையான சமாதி சமாதிக்கு மேல் முத்துராமலிங்கத்தின் சிலை சமாதியை சுற்றி கிரில் சுட்றமைக்கப்பட்ட கம்பிஜன்னல் அதற்க்கு மேல் கோவில் பிரகாரம் போல் பூஜைக்கான அனைத்து சிறப்பமசதுடன் முத்துராமலிங்கத்தின் நினைவிடம் கும்பம் கொண்ட முத்துராமலிங்க தேவர் போற்கோவில் என்று அந்த சமூக மக்கள் வழிபடும் வழிபாடு தளமாகவே விளங்குகிறது.

அந்த சமாதியை சுற்றி முத்துராமலிங்கத்தின் வீடு, முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை வரலாறு, அவர் பேசிய உரை, தலைவர்களுடன் சந்தித்த புகைப்படம் என்று ஒருகட்டிடம் முத்துராமலிங்கத்தை பெரிய தலைவர் போல் சித்தரித்து காட்டுகிறது. அதை சுற்றியுள்ள கட்டிடங்கள் அனைத்தும் தமிழக முதல்வர்களான ஜெயலலிதாவாலும், கலைஞர் கருணாநிதியாலும் முறையே அடிக்கள்நாட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது அந்த கட்டடத்திற்கான நிதியை வழங்கியவர்கள் அந்த சாதி மக்கள் அல்ல அந்த தொகுதி M.L.A & MP யுமே.

அரசியல் அங்கீகாரம் பெற்றால் தான் இவை அனைத்தும் எம் சமூகத்திற்கும் சாத்தியம் என்பதை என் மனதிற்குள் நினைத்துகொண்டு திரும்பி வந்துகொண்டிருகையில் அந்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி என்னை சிறிது நிலைகுலைய செய்தது என்றால் மிகையாகாது.

ஆம் அவர் கேட்டார் ஏன் தம்பி நீங்க தேவர் சமூகத்தைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை ஆணித்தரமாக என்னுடன் விவாதித்தீர்களே நீங்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கும் உங்கள் தலைவர் இம்மனுவேலுவின் சமாதிக்கும் முத்துராமலிங்கத்தின் சமாதிக்கும் உள்ள வேறுபாடே உங்களை குறைத்து மதிப்பிட செய்கிறதே என்றார்.

உண்மையில் நான் அவரின் கேள்விக்கு தடுமாறிவிட்டேன் பின் சுதாரித்துக்கொண்டு அவரிடம் கூறினேன் எங்கள் தலைவர் மக்களின் தலைவர், போராளிகளின் தலைவர், எங்கெல்லாம் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறதோ அங்கே அவரின் ஆன்மாவாய் எம் சமூகம் முன்னிற்கும் அப்பேற்பட்ட அப்பூர்வ தலைவர் எங்கள் அய்யா இம்மானுவேல் சேகரன் அதனால் தனித்து உறங்காமல் எம்மக்களோடு மக்களாக சக போராளியாய் உறங்கிகொண்டிருக்கிறார் என்றேன் மனிதர் ஆடிபோனார் ஒன்றும் பதில் சொல்லாமல் என்னுடைய கருத்தையும் ஏற்று குறித்துக்கொண்டு பிரியா விடை பெற்றார்.

சிந்திப்பதற்கு:- நாமும் அய்யாவின் போராட்ட வரலாற்றையாவது சமாதியின் அருகில் நிறுவினால் நன்றாக இருக்கும். வேறு என்னவெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து அதை செவ்வனே செய்து முடித்தால் நன்றாக இருக்கும்.

-- ராம் மள்ளர் 

No comments:

Post a Comment