Thursday 8 August 2013

ஒரு சில கேள்விகள்


வரலாறு பேசும் தலைவர்கள் பள்ளர்களை மிக தவறாக வழி நடத்துகிறார்கள் என்றும், 'தலித்தியமே' பள்ளர்களுக்கான சரியான அரசியல் என்றும் கூறும் அன்பர்களே.

உண்மை தான். வரலாறு பேசி வெட்டி நேரம் விரையம் செய்வது தவறு தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.. ஆனால், தலித்திய பாதையில் இதுகாறும் பயணிக்கும், (பயணிக்க போகும் தலைவர்களிடம்) இந்த அடியேனின் ஒரு சில கேள்விகள்.

* 'தேவேந்திர குல வேளாளர்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஏன் என்று யாராவது பொது நிகழ்வில் கேட்டால், நீங்கள் 'தலித்' வரலாறு என்ற இல்லாத ஒரு வரலாறை சொல்வீர்களா? இல்லை, 'தேவேந்திரன்' என்ற பெயருக்கு பின்னால் உள்ள வரலாறை சொல்வீர்களா..?

* 'தேவேந்திரன்' பற்றி தான் விளக்கம் அளிப்பீர்கள் என்றால், நீங்கள் மட்டும் ஏன் அப்போது வரலாறு பேச முர்ப்படுகிரீர்கள்?

* 'பள்ளர்கள் எப்படி தலித் ஆனார்கள்' என்று யாராவது கேட்டால் என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன்.

* தலித்தியம் பள்ளர்களுக்கான பாதை என்றால், தமிழகத்தின் வடக்கு பகுதியில் தலித்துகளுக்கு ஆதரவாகவும், தெற்கு பகுதியில் தலித்துகளுக்கு எதிராகவும் செயல்படும் அனைத்து திராவிட சக்திகளையும் எதிர்த்து குரல் கொடுப்பீர்களா? இல்லை, கூட்டணி வைப்பீர்களா...?

* கூட்டணி வைப்பது அரசியல் இருப்பை தக்க வைத்துகொள்ள எந்த ஒரு தலைவரும் எடுக்கும் முடிவு தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தவறும் இல்லை. ஆனால் உங்களின் கொள்கை விளக்கம் ஏன் வரலாற்று அரசியலுக்கு எதிராகவே இருக்கிறது? வரலாறை புரிந்து கொள்ளவில்லையா? இல்லை மறைக்கிறீர்களா? இல்லை மறுக்குறீர்களா?


- ம.பொன்ராஜ் காலாடி

No comments:

Post a Comment