Thursday 8 August 2013

நல்ல தமிழக நிர்வாகத்துக்கு!



நல்ல தமிழக நிர்வாகத்துக்கு!

திருடும் கூட்டங்களின் ஆதிக்க ஆட்சிகளால் தமிழகம் வளர்ச்சித்திட்டங்களை யோசிக்கமுடியாமல் சிக்கித்தவிக்கிறது.


வளர்ச்சித்திட்டங்களையும், எதிர்கால திட்டமிடுதலையும் சிறப்பாக யோசிக்கும் எந்த திறமையாளர்களையும் ஆட்சி அதிகாரங்களில் தலைதூக்கவிடாமல் தடுத்துவிடுகிறார்கள் அந்த திருட்டுக்குலத்தவர்கள்.


1. அதன் விளைவுதான் கிடைத்த காவிரி நீரைக்கூட முறையாக பயன்படுத்த முடியாமல்போனது.


2. கனிம வளங்களின் முறையான வருமானம் அரசுக்கு கிடைக்காமல் ஆட்சி அதிகாரங்களிளிருக்கும் திருடர்கள் தங்கள் பைகளை நிறைத்துக்கொண்டது.


3. இலவசங்களுக்கு விலையில்லா பொருட்கள் என்ற பெயரில் மக்குப்பொருட்களை கொடுத்துவிட்டு, ஒட்டு வாங்கி ஜெயித்து கொள்ளை லாபம் கிடைக்கும் கனிமங்களையும், கிடைக்கும் வருமானகளை திட்டத்திற்கு ஒதுக்குகிறோம் என்று அதிலும் கமிசனாக தங்கள் பாக்கேட்டுக்கே திருப்பியது.


4. கொள்ளைமேல் கொள்ளையடித்துகொண்டிருப்பவர்கள் மாற்று கட்சியினரை பழிவாங்குகிறேன் என்ற பெயரில் சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக திருத்தி நிலமோசடி என்ற பெயரில் நடவடிக்கை எடுப்பதற்காக பழிவாங்கும் சட்டமியற்றியும், கொள்ளை லாபம் பார்ப்பதற்காக நிலத்தின் வழிகாட்டும் மதிப்பை கொலைவேறித்தனமாக உயர்த்தி ரியல்-எஸ்டேட் துறையில் தங்கள் அறைவயிரை நிரப்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான நில-புரோக்கர்களின் வயிற்றில் அடித்தது.


5. மின்சாரத்தின் தேவையறிந்து திட்டங்களை துவக்காமல் அந்நிய நிருவங்களை கமிசன் பெற்றுக்கொண்டு அனுமதித்தது. இதனால், இந்தத்துறையில் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த தமிழர்கள் வயிற்றில் அடித்தது. இதனால் நிலத்தடி நீரை வைத்து விவசாயம் செய்த விவசாயத்தை தொலைத்தது.


6. பல ஆண்டுகளாக தங்கள் திருட்டுத்தொழிலை சிறப்பாக செய்ய வசதியாக காவல்த்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எதிர்ப்பவர்களை துவம்சம் செய்தது, செய்துகொண்டிருப்பது...

ஆக இன்னும் எவ்வளவோ சொல்லமுடியும். அனைத்திலும் தமிழகம் தன் ஆட்சித்திறனை இழந்துவிட்டது. அதற்க்கான காரணம்: சிறந்த நிர்வாகத்தை கொடுத்து ஆயிரமாயிரம் ஆண்டு காலம் ஆட்சிபுரிந்த மள்ளர் இனத்தை பள்ளர்கலாக்கி, அவர்களது நிர்வாக திறமையை செயல்படுத்த விடாமல் செய்தது. அதேநேரம், பிற இனத்தவர்களில் உள்ள சில திறமையான, நேர்மையானவர்களையும் ஆளவிடாமல் செய்து அந்த திருட்டுக்கூட்டங்கள் இன்றுவரை தமிழகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் பிடித்து வைத்துக்கொண்டு மரணத்தின் தருவாயில் வைத்துக்கொண்டிருக்கிறது...


இதை தடுக்க நினைப்பவர்களின் மேல் திருட்டு அரசாங்கங்கள் தங்கள் சட்ட அஸ்திரத்தால் வீழ்த்துகிறது. இதை தடுக்க அனைத்து சமுதாயத்தினரும் அந்த திருட்டு சமுதாயத்துக்கு எதிராக திரும்பினால் மட்டுமே இந்த தமிழகம் நல்ல நிலைமைக்கு வரும்.


 -- நாகராஜன் மள்ளர்.

No comments:

Post a Comment