Saturday 17 August 2013

பிரபஞ்சன் எழுதிய எழுதப்படாத சரித்திரம்

பிரபஞ்சன் எழுதிய எழுதப்படாத சரித்திரம்

தேவேந்திர வேளாளர்களின் குலமரபுக் கதைகளாகப் பல கிடைக்கின்றன. ஆய்வாளர் தே.ஞானசேகரன் சுமார் 12 கதைகளைத் தொகுத்துத் (மள்ளர் சமூக வரலாறு) தந்திருக்கிறார். ஒரு கதை, தேவேந்திரனுக்கும் நீர் நிலையில் இருக்கும் தாமரையில் இருக்கும் திருமகளுக்கும் பிறந்த குழந்தையின் வழியினரே தேவேந்திரர்கள் என்கிறது. தேவேந்திரனின் வியர்வையில் பிறந்தவர்கள் அவர்கள் என்கிறது ஒரு கதை.

இந்திரனின் பிள்ளை தேவேந்திரன் பள்ளிக்குச் செல்லாமல், குழிதோண்டி, தண்ணீர்ப் பாய்ச்சி உழவு செய்து விளையாடினான். இந்திரன் அதைக் கண்டு தேவேந்திரனை பூமிக்கு அனுப்பி வேளாண்மை செய்யச் சொல்லி இருக்கிறான். அந்த தேவேந்திரன் பூமிக்கு நெல்லைக் கொண்டு வந்து நட்டான். பார்வதியின் வியர்வையில் பிறந்தவன் கழியன்(கழிநீர் நீலை) என்பவன். அவன் மேலோகத்தில் முதல் முதலாக நெல்லைக் கண்டுபிடித்து அதைச் சாப்பிட்ட சிவன், அந்த அரிசியின் சுவையைப் பாராட்டுகிறார். அந்த கழியன் பூமியில் நெல் விவசாயம் செய்கிறான்.

ஒரு கதை இப்படிச் சொல்கிறது. பார்வதிக்கும் சிவனுக்கும் வல்லபன் என்று ஒரு குழந்தை பிறக்கிறான். வல்லபன், இந்திரனுக்கு வளர்ப்பு மகனாகிறான். அப்போது சிவன், ‘நீ நெல்லை உற்பத்தி செய்து, பூலோகத்தில் பயிர் செய்து மக்களைக் காப்பாற்று, நீ வேண்டும்போது பார்வதி கங்கை நீரைப் பொழிவாள், நீ இருக்கும் இடம் என்றென்றும் பசுமையாகவும், நீர் நிறைந்தும் இருக்கும் என்று வரம் அளித்து பூமிக்கு அவனை அனுப்புகிறார். தேவேந்திரன் குடும்பம், ‘செந்நெல், மண்வெட்டி, உழுவயல், நீர் நிறைந்த குளம், ஆறு’ வேண்டுமென்று கேட்டது. சிவனார் மகிழ்ந்து, கேட்டதைக் கொடுத்தார். அதுமுதல் தேவேந்திரர்கள் நெல் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

தேவேந்திர குல வேளாளர்களில் குலமரபுக் கதைகளின் சாரம் இதுதான். இந்தப் புராண, மக்கள் மரபுக் கதைகள், மூன்று விஷயங்களைத் தம் பாணியில் சொல்லி இருக்கின்றன. ஒன்று, நெல் மேல் உலகில் இருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டு, தேவேந்திர குலம் நெல்லை உருவாக்கி, உற்பத்தி செய்து வாழும் குலம். மூன்று, நெல் விவசாயத்துக்கு ஆதாரமாக நீர் நிலைகளை உருவாக்கியவர்கள். இக் கருத்தே அக் கதைகளின் சாரம். இவைகளை ஆராய்வோம். உலகம் முழுக்கப் பழைமையான சமுதாயங்களின் தோற்றக் கதைகள் இப்படியான குறியீடுகளாகத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இவைகள் கற்பனைகள் அல்ல. கதை ரூபமான உண்மைகள்.

1. நெல் மேல் உலகில் இருந்து, இந்திரன் உலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்க முடியாது. ஆனால், இதர பகுதியில் இருந்து அதாவது மலை மாதிரி குறிஞ்சி நிலப் பகுதியில் இருந்து ஆதி உழவர்களால் சமதளமான மருத நிலத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்பதே இக் கதையின் அர்த்தம். மலைப் பகுதியில், சமவெளிகளில் இயற்கையாக விளைந்துக்கிடந்த நெல் மணிகளைக் கண்டடைந்து, அதை விவசாய விஞ்ஞானமாக மாற்றிக் கழனிகளைத் தயார் செய்து பண்படுத்தி நெல் விதைத்து, நாற்றுகளை உருவாக்கி, மாற்றி நட்டு, விவசாயம் செய்திருப்பதையே அந்தக் கதைகள் குறிப்பிடுகின்றன. மலை என்பதைத்தான் மேல், மேல் உலகம் என்று மக்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.

2. ஆதி உழவர்களான, தேவேந்திர குலம், சுமார் அறுபது வகையான நெல்லைக் கண்டுபிடித்து விவசாயம் செய்திருக்கிறது. சங்க காலத்துக்குச் சற்று முன்னர், தமிழ் மக்கள் உணவில் நெல் பிரதான இடம் பெறவில்லை. வரகரிசி, தினை, கொள்ளு, அவரை ஆகியவை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக, புறநானூறு 335ம் பாடல் சொல்கிறது. ஆக, தமிழர் உணவில் நெல் என்கிற உணவுப் பொருளைச் சேர்த்ததில் ஆதிகால உழவர்களான மள்ளர்க்குப் பேரிடம் உண்டு என்பது இந்தக் கதைகளின் அடுத்த சேதி.

3. நெல் விவசாயத்துக்காக நீர் நிலை, ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்கள் வேண்டும். அதை, நெல் விவசாயம் செய்த மள்ளர்கள் உருவாக்கினார்கள். இது ஒரு விஞ்ஞானம்தான். மழைத் தண்ணீர் ஓடும் பாதையைக் கண்டறிந்து, அது தேங்கி நிற்கும் இடத்தில் குளம் வெட்டினார்கள். பெரும் பள்ளத்தை ஏரி ஆக்கினார்கள். இயற்கை நீர்ப் பெருக்கை ஆறு என்று பெயரிட்டு (நிலத்தை அறுத்துக்கொண்டு செல்வதால் அது ஆறு ஆயிற்று. ஆறு என்றால் வழி என்று பொருள்) அதன் இரு கரையிலும் மேடுயர்த்திக் கரை கட்டிக்கொண்டார்கள். நீரை நிர்வாகம் செய்தவர்கள், நீர் ஆணிக்கர் என்று சொல்லப்பட்டார்கள். பண்ணைக்கு உரிமையாளர் பண்ணாடி ஆனார்கள். கடைமடைப் பகுதியில் விவசாயம் செய்தவர் கடையர் ஆனார்கள். மடை எடுக்கும் நுட்பம் கற்றவர்கள் மடையர் ஆனார்கள். களத்தில்நெற்களத்தில் பணி செய்தவர் களமர் ஆனார்கள். கால் என்றால் நிலப்பகுதி என்று பொருள். வெற்றிலைக் கால், என்றால் வெற்றிலை விளைநிலம் என்று அர்த்தம். நெற்காலில் பணி செய்தவர்கள் காலாடி ஆனார்கள். வாய்க்கால்காரர்களே வாய்காரர்.

மருத நிலத்தின் விவசாயம் நிலை பெற்றதை ஒட்டிய காலப் பகுதியில்தான்சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குடும்பம் என்கிற சமூக அமைப்பு தோன்றி இருக்கிறது. ஒரு தலைவி, ஒரு தலைவன், குழந்தைகள் என்ற ரத்த உறவு கொண்டவர்கள், ஒரு கூரையின் கீழ், தனிச் சொத்து உரிமையோடு வாழத் தொடங்கிய காலம்தான் குடும்பம் என்ற அமைப்பு உருவான காலம். அது, மருத நில உழவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அந்த அமைப்புக்குக் காரணமாக இருந்த மருத நில உழவர்கள் குடும்பனார் எனப்பட்டார்கள். குலம், குழு வாழ்க்கை சிதைந்து, தனிச் சொத்து, தனிக்குடும்பம் உருவான பழம் காலத்து வரலாறு இது. சங்க இலக்கியம் முழுக்க முழுக்கக்

குடும்ப அமைப்பை நிலைப் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம், உருவாகி வந்து கொண்டிருக்கிற புதிய நாகரிகமாகிய ‘குடும்பம்’ என்ற புதிய வாழ்க்கைமுறையை நிலைபேறு அடையச் செய்யத்தான்.

குடும்பம் என்பது, ஒரு சிறிய அரசாங்கம். பெரிய அரசாங்கத்தின் சிறிய பதிப்பு அது. அங்கு அரசன். இங்கு குடும்பத் தலைவன். அங்கு அரசி. இங்கு தலைவி. அங்கு அரசுக்கு உரியவன் இளவரசன். இங்கு சொத்துக்கு உரியவர்கள் குழந்தைகள். இந்தக் குடும்பம் என்ற அமைப்பில்தான் ‘ஆண் தலைமை’ உருவாகிறது. (அது சரியா, தவறா? என்று ஆராயும் இடம் இதுவல்ல.) குடும்ப அமைப்பு நிலைபெற்ற பிறகுதான் திட்டவட்டமான சட்டமுறைகள், அமைப்புகள் கொண்ட அரசுகள் உருவாகின்றன.

சங்க காலத்திலேயே இந்திர வணக்கம் இருந்திருக்கிறது. இந்திரன், பெரிய கடவுளாக இருந்திருக்கிறான். இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்கத் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில், ஓரம் போகியார் எழுதிய மருதம் தொடர்பான பாடலில் இந்திர விழா பற்றி வந்துள்ள செய்தி இது:

இந்திர விழாவிற் பூவின் அன்ன புன்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ன நின் தேரே& என்பது அந்தப் பாடல்.

இந்திர விழாவுக்குப் பலவிதமான பூக்களைத் தருவித்துத் தொகுத்தாற்போல, இவ்வூர் மங்கையரைத் தொகுத்து ஆடல் பாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்பாட்டின் சுருங்கிய பொருள்.

இந்திரவிழா கொண்டாடப்-படுவதன் நோக்கம், முதல் நோக்கம் மழை. மழைக்குக் கடவுளாகிய இந்திரனை விழா எடுத்து வணங்கி அவன் அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகினால், நாட்டில் பசி மறையும். வளம் பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதாகும். அதனால்தான் பொங்கலுக்கு முதல்நாள் இந்திரனாகிய போகிக்கு (போகிபோகம் துய்ப்பவன்) ஒதுக்கப்பட்டது.

மருத நிலத்து வேந்தன், இந்திரன் வழிபாடு இவ்வளவு சிறப்பாக நடந்த நாட்டில், அது வழக்கமற்று மறைந்து போகக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. சிலப்பதிகாரம் அதற்குப் பிந்தைய மணிமேகலை காலத்திலும், கி.பி. 5ம், 6ம் நூற்றாண்டு வரை இந்திர வணக்கம் பெரு வழக்காக இருந்து வருகிறது. பின் ஏன் மறைந்தது?

அறிஞர் குருசாமி சித்தர் களப்பிரர் மற்றும் வடுகர் ஆட்சிக் காலங்களில் சமய தளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் வாழ்க்கை முறை மாறியது என்கிறார். உண்மைதான். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சைவ, வைணவ மதங்கள், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டன.

வைணவ மதக் கடவுளான கண்ணன், இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடை செய்கிறான். இந்திரன் கோபம்கொண்டு, ஊரை அழிக்கும் மழையை, புயலை அனுப்புகிறான். கண்ணன், கோவர்த்தனகிரி மலையைத் தூக்கிப் பிடித்து, மக்களைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அழித்தான் என்கிற கதை இந்திர மதத்துக்கும், வைணவத்துக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தின் கதைதான். சங்க காலத்துக்குப் பிறகு, குறிப்பாக சோழப் பேரரசர்கள் காலத்தில் அரசர்களின் ஆஸ்தான புரோகிதர்களாக அமர்ந்த பிராமணர்கள், ராஜகுருக்களாக விளங்கி, தமது பூர்வ வைதீகத்தை விடுத்து, சைவம், வைணவம் சார்ந்ததும், மள்ளர்கள் வேத மதங்களான சைவ, வைணவத்தை ஆதரித்ததும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

மிகப் பெரிய கோயிலைக் கட்டச் சொன்னார் ராஜ-ராஜனிடம், அவன் ஆசிரியரும் ராஜகுருவும் ஆன கருவூரார் . இதன் காரணம், கோயில் மிகப் பெரிதாய் இருப்பதன் குறியீடு, மற்ற மதங்களைவிடவும் சைவம் பெரியது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தத்தான். வைணவத்துக்கும் இது பொருந்தும். இந்திரனின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்ட வேந்தர்கள், சிபியின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்டார்கள்.

தமிழரின் சமயம், வாழ்க்கையோடு இணைந்த, மிக இயல்பான மிக எளிமையான சமயம். வாதங்கள், தத்துவங்கள் இல்லாத மகிழ்ச்சி தரக்கூடிய சமயம். தமிழர்களே அடிப்படையில் இன்ப நாட்டம் உடையவர்கள். அன்பும், காதலும், மிக இயற்கையாக வெளிப்பட்ட சண்டையும், போரும், போருக்குப்பின் சமாதானமும் என்று மிகச் சாமான்ய, அதேசமயம் மிக எளிமையான சமூகம் இது.

மிகக் கடுமையான சண்டையும் மிகக் கடுமையான அன்பும் கொண்ட, தூய்மையான மனமும் இயற்கையாகிய வாழ்வும் கொண்ட மகத்தான இனம் தமிழினம். வடநாட்டிலிருந்து வந்த சமயங்களும் உள்நாட்டுச் சமயங்களும் அவர்கள் வாழ்க்கை என்ற குளத்தில் கல் வீசி அவர்கள் அமைதியக் கெடுத்தன.

என்றாலும் மள்ளர்கள் பலருக்கே அவர்கள் வரலாறு தெரியவில்லை. அவர்கள் விளைவித்த நெல் மணிகளின் குவியல்தான், ஒரு காலச்சக்கரத்தையே கட்டி எழுப்பியது. தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று தமிழரின் பெருமைகளாகப் பேசப்படுவது எல்லாம் தமிழ் உழவர்களின் கலாசாரம்தான் என்பதே உண்மை. நெற்களம்தான் தமிழ்க் களம். நெல் என்பதே சொல்லும் ஆயிற்று. நீர் என்பதே நீர்மை ஆகி, அன்பாயிற்று. வரப்பு என்பதே வரம்பாகி, சட்டம் நீதி ஆயிற்று. விளைச்சல் என்பதே சமூக வளர்ச்சி என்று ஆயிற்று. உழப்பட்டதுக்கே நிலம் என்று பேர். உழப்படாதது வெறும் மண்தான். உழவர்களே சகல முன்னேற்றத்துக்கும் அச்சாணி.

Friday 16 August 2013

‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’



‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.
மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.
காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.
நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.
‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.
இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.
‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.
நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?
யார் இந்த தேவேந்திரன்?
ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.
உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.
வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.
மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.
சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.
‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.
நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.
நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.
பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.
சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?
சரித்திரம் தொடர்கிறது

-- எழுத்தாளர்  பிரபஞ்சன்

கமல் ஹாசனும் மாரி செல்வராஜும்


நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு

வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .

தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன் செல்வராஜோ என் தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை மூன்றாம் தலைமுறை நான்…
சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் இணையதளத்தில் சண்டியர்க்கு ஆதரவாக நீங்கள் போதையில் ஆற்றிய முற்போக்கு உரையை பார்த்தேன் சரி அதற்கு அப்புறம் வருவோம். முதலில்
முற்போக்குவாதி ,பூனூல் துறந்த பிராமணன் , பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பவர் என்றெல்லாம் சொல்லிகொள்ளும் நீங்கள் பல பிரிவு மக்கள் பல அடுக்கு சாதி கூறுகளுடன் வாழும் நம் நாட்டில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கை முறையை , அவங்க அரிவாள் பிடித்த முறையை ,அவர்கள் அரிசனனுக்கு சந்தோசமாய் கூழ் ஊத்திய முறையை , மீசை முறுக்கி வளர்த்த முறையை , சாராயம் குடித்த முறையை , சக மனிதனின் சங்கறுத்த முறையை காட்டுகிறேன் என்று “தேவர் மகன் “என்ற தலைபோடு ஒரு திரைப்படம் எடுத்தது ஏன்?
· ஒரு பிரிவு மக்களின் வன்முறையை ஆதிக்கத்தை அவர்களின் அறியாமையை காட்டி அவர்களை உசுப்பேத்திவிடவா இல்லை அவர்களின் சாதிய வேல்கம்புகளுக்கு கூர் தீட்டிவிடவா?
· அல்லது எப்போதும்போல மீசை முறுக்க ஆசைபட்டு பணம் சம்பாதிக்கவா
அது எப்படி “போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” இதன் விளைவையும் வலியையும் இன்றுவரை நீங்கள் உணர்ந்ததுண்டா……
சொல்கிறேன் கேளுங்கள் ஒருவேளை நீங்கள் அசட்டுபோதையில் இருந்தாலும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ……….
· ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட பள்ளிகளில் அடித்துக்கொண்டார்கள்,
· திருமண சடங்கு விசேச வீடுகளில் ஏன் கோவில்களில் கூட உங்களின் முற்போக்கு பாடல் ஒலித்து கிராமங்களின் ஒற்றுமையை ஆடவைத்தது.
· வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டிக்கூட வலுகட்டாயமாக பாட வைக்கபட்டாள்.
· எங்களுக்கெதிரான உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கபட்டன
· வேட்டிகள் மடித்து அதிகார ஆணவத்தோடு கட்டபட்டன
மூன்று மணி நேரம் நீங்கள் மீசை முறுக்கி அரிவாள் தூக்கி கொலைகளையும் செய்து கடைசி மூன்று நிமிடத்தில் “ டேய் அரிவாள்களை கீழ போடுங்கடா” என்று சொன்னது நீங்கள் விரும்பியதை போலவே யாருடைய காதிலும் விழவில்லை போலும் இத்தனைக்கும் பிறகும் எதிர்வினை புரியாமல் இருக்க நாங்கள் என்ன எருமை மாடுகளா….கை ,கால் , உயிர் , உடைமை இழக்கத்தான் செய்தோம் . ஆனால் நீங்களே எதிபார்க்காத ஒரு எழுச்சியை யாம் பெற்றோம். இத்தனைக்கும் பிறகும் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு பல உதடுகள் உச்சரிக்ககூடிய வெற்றி தேவைபட்டபோது மறுபடியும் மனசு கூசாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்களின் அதே போர்களத்தை தான்.
”சண்டியர்” யார் இந்த சண்டியர் நீங்களா ஐயோ! நீங்கள் பரமக்குடி சாஸ்த்திரிகள் ஆச்சே…ஐரோப்பிய அறிவை பெற்ற ஒரே தமிழ் சீர்திருத்த சிந்தனையாளர் ஆச்சே! அப்படியெனில் யார் அந்த சண்டியர் மறுபடியும் அதே ஒரு பிரிவு மக்கள் ஆனால் இப்போது கருப்பு சட்டை முறுக்கு பட்டை ,கறுக்கு அரிவாள் சகிதம் வந்து இது தென் தமிழகத்தில் சாதி கலரவத்தை தூண்டிய “ தேவர்மகனின் இரண்டாவது பாகம் “ என்ற அருவருப்பான அறிவிப்பு வேறு…..சண்டியர் என்ற தலைப்பை தயவுசெய்து மாற்றிகொள்ளுங்கள்” என்று ஒரு பாதிக்கபட்ட ஒரு சமுக மக்களின் சார்பாக அதன் பிரதிநிதி சொன்னதற்கு எவ்வளவு ஆரிய அதிகாரத்தோடு உங்கள் பதிலை சொன்னீர்கள்..
· சண்டியர்னு பேர் வைத்தா கிருஸ்ணசாமி கோவித்துகொள்வார் என்று அதனால கிட்டிவாசல்னு பேரு வைக்கலாமென்றால் அதுக்கும் கோபித்துக்கொண்டால் என்ன பண்ணுவது.
எவ்வளவு அருவருப்பான ஆணவமான நாகரிகம் இல்லாத பதில். நீங்கள் மன்மதலீலை என்று பெயர் வைத்தற்கா அவர் எதிர்த்தார். நீங்கள் தேவர்மகன் என்று பெயர் வைத்தபோதுகூட யாரும் எதிர்க்கவில்லையே.. ஆனால் அதன் மூலம் வந்த விளைவும் ஏற்பட்ட வலியையும் பார்த்து பயந்து பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று ஒரு ஒடுக்கபட்ட சமூக மக்களுக்காய் கேட்டதற்காய் இவ்வளவு கொச்சையான பதில் .. சமூக அக்கறை இல்லாதவன் எப்படி கலைஞன் ஆக முடியும். இந்த முற்போக்கு குசும்பும் ஆணவமும் இன்று வந்ததில்லை உங்களுக்கு உங்கள் தாத்தன் முப்பாட்டன் காலத்து ஆரிய குசும்பு என்று எங்களுக்கு தெரியும்…..
· எப்படி ஒரு சினிமாவின் பெயரை மாற்ற சொன்னதால் நாங்கள் கலாச்சார காவலர்களா….மனிதனை கழுவ மரத்தில் ஏற்றி கொன்ற சமண கலாச்சாரம் எங்களுடையதா
யாருக்கு வேண்டும் உங்கள் கலாச்சாரம். உங்களுக்குதான் வேண்டும் எங்கள் கலாச்சாரம் நாங்கள் அடிமையாய் இருந்த கலாச்சாரமும் நாங்கள் அரிவாள் தூக்கிய கலாச்சாரமும் உங்களுக்குத்தான் வேண்டும்.அப்பொதுதானே அதில் உங்களை போல ஆரிய நாட்டாமைகள் குளிர் காய முடியும். அப்புறம் என்ன சொன்னீர்கள்……
· ஐந்து வருடத்திற்குள் மாறிப்போகும் அரசியல்வாதிகளை போல எல்லாமே மாறி போய்விடுமா,,,

திரு .கமல் அவர்களே….
எதுவும் எங்கும் மாறவில்லை. உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை எதுவும் மாற போவதுமில்லை யாரும் எதையும் மறக்க போவதுமில்லை.
இன்றைய சூழலில் கிராமப்புற பள்ளிகளில் உலவும் சாதியின் உருவம் உங்களுக்கு தெரியுமா …….பள்ளி பாடபுத்தகங்களில் முதல் அட்டையிலோ இல்லை வேறு பக்கங்களிலோ தலித் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் இருக்குமெனில் அவரது இரு கண்களும் பேனா முனைகளால் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறதென்று……உங்களுக்கு தெரியுமா! அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றிய கேள்வி வினாத்தாளில் கேட்டால்கூட அதற்கு பதில் எழுத விரும்பாமல் விட்டுவிட்டு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் என்று, இன்றைக்கு சாதியின் பட்டறையை போல் ஆகிப்போன தமிழக சட்டக்கல்லூரிகளில் கல்லூரி பேப்பர்களில் இருக்கும் அண்ணலின் படத்தின் கண்கள் ஆதிக்க விரல்களில் உள்ள சிகரெட்டால் சுடபட்டுக்கொண்டிருக்கிறதென்று…… இந்த நீட்சியின் எதிர்வினையாகத்தான் நடத்தபட்டது சென்னை சட்டக்கல்லூரி பயங்கரம் . அன்றுமா புரியவில்லை உஙகள் முன்னோர் ஆதிகாலத்தில் தொடங்கிவைத்த சாதி கத்திக்கு இரு பக்கமும் கூர்மை என்று…….ஐயா, உலக நாயகரே !
· இன்னும் கண்டதேவி தேர் நடு வீதியில்தான் நிற்கிறது
· இன்னும் உத்தப்புரத்தின் சுவர் மறித்துக்கொண்டு அவமானமான சின்னமாகத்தான் நிற்கிறது.
· கொடியன்குளத்திலும் ஆழ்வார்கற்குலத்திலும் , மேலவளவிலும் ,தாமிரபரணியிலும் நாங்கள் அஞ்சலி செலுத்தி இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறோம்.
· வெண்மனியின் தீ வெக்கையும் அதன் வடுவும் அதுக்குள்ளவா எங்களுக்கு மறந்துபோகும்.
கடைசியாக “உன்னைபோல் ஒருவன்” எப்போதும்போல கடன் வாங்கிய உங்கள் சீர்திருத்த மதியை வைத்து மறுபடியும் தமிழ் மக்களுக்கு ஒரு நாசகார சதியை கற்பிக்கும் ஒரு முயற்சி……..,
· மனிதாபிமானம்
· கொலைக்கு கொலையே தீர்வு
· பிறமொழிகாரனையும் நேசிப்பது.
அடேயப்பா…….உங்கள் மனிதாபிமானத்தை தூக்கி தமிழக அரசின் புகார் பெட்டியில்தான் போடவேண்டும். மனிதாபிமானம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே அருகதையற்ற சினிமா நடிகர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறத்துவிடாதீர்கள் .
· வெண்மனி
· கொடியன்குளம்
· மேலவளவு
· ஆழ்வார்கற்குளம்
· தாமிரபரணி இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள் ஈழத்தில்
உன் மொழி பேசும் உன் சகோதரன் கொத்து கொத்தாய் செத்து மடிந்தபோது என்ன செய்து கிழித்துவிட்டீர்கள் என் மனிதாபிமான காவலரே……….ஆமாம் அது என்ன வசனம்….
· பம்பாய்ல எவனுக்கு என்ன நடந்தாலும் நாம இங்க சும்மா இருப்போம். நமக்கென்ன அதைப்பற்றி கவலை அவன் என்ன நம் மொழியா பேசுகிறான் இல்லை நம் சொந்தகாரனா…….
அடங்கொப்புரான ……ஐயா அறிவிஜீவி ! தாமிரபரணியில் பச்சை குழந்தையோடு சேர்த்து பதினேழு பேர் பிணமா மிதந்த போது ஏற்கனவே வறலாற்று பிழைக்காக சுட்டுக்கொள்ளப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை சுட்டுகொள்ள பூனூலோடு புறப்பட்டவர் தானே சினிமாவில் நீங்கள்…….அப்புறம் என்ன?
· கொலைக்கு கொலைதான் தீர்வா
குடிச்சுப்புட்டு தன் கவுரவத்துக்காக இருபதுபேர் சாக காரணமாக இருந்த விருமாண்டிக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று சொன்ன நீங்கள் ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக அதன் சமூக நீதிக்காக அறியாமையின் காரணமாக வன்முறையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வை பணையமாக வைத்து பழிக்கு பழிவாங்கியவர்களை நீதிமன்றமே தண்டனை கொடுத்தாலும் அவர்களை கடத்தி வந்து குண்டு வைத்துதான் கொலை செய்ய வேண்டுமா?
“வாழ்க உங்கள் ஆரிய ஜனநாயகம்” நீங்கள் சொன்னதுபோல் எந்த ஒரு மனிதாபிமான குப்பனும் சுப்பனும் இந்த காரியத்தை செய்யத்தான் மாட்டான் மிஸ்டர் களவானி 

காமன்மேன் கமல் அவர்களே  உங்களின் ஆரிய முற்போக்கு அறிவின் அடிப்படையில்  சமூக போராளிகள் பொறுக்கிக்கு பிறந்தவர்கள் என்ற மோசமான அருவருப்பான கருத்தை நீங்கள் சொல்வதற்க்க்காக”துரோக்கால்” என்ற படம் வரும்வரை காத்திருந்தது ஏன்? அதே போல் ஆரிய மனிதாபிமான கோபத்தை வெளிப்படுத்த ”வெட்னஸ்டே”வரும்வரை காத்திருந்தது ஏன்?…

கடைசியாக திரு. கமலஹாசன் அவர்களே ! நீங்கள் கருப்பு சட்டை அணிவதால் உங்களின் ஆரிய வெள்ளைத்தோல் எங்களுக்கு மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள்…..பூனூலை நீங்கள் துறந்திருக்கலாம் ஆனால் உங்களின் தலைமுறையின் பூனூல் தடம் உங்களை விட்டு போகவில்லை என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை. உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டீர்கள் அப்புறமென்ன நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் , பாதுகாப்பாய் இருப்பதற்கும்சகலகலாவல்லவனும் அவ்வைசண்முகியும் ,தசாவதாரமும் போதுமே…..உங்களின் ஆரிய முற்போக்கை அம்பலபடுத்தும் உன்னைபோல் ஒருவனும் , சாதி வாழ்வை காட்டி மக்களை பிரித்துக்காட்டும் தேவர்மகனும் , விருமாண்டியும் எதற்கு…
· கமல் அவர்களே, உங்களுக்கு திரைக்கதை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எங்கள் வாழ்வியலில் நாங்கள் வாழும் வாழ்க்கை முறை அசாதரமானது… என்பதை தயவுசெய்து கொஞ்சம் கருத்தில் வையுங்கள்

- தோழர் மாரி செல்வராஜ் 

His other Articles : 

தெற்கே தேவேந்திரனுக்கு தேள்கடித்தால் வடக்கே வன்னியனுக்கு நெறிகட்டும்


அடையாள அரசியலினாலும் தாரளமயத்தாலும் உருவான இந்தப் போக்கு அரசியல்கட்சிகள் மீது பாதகமான தாக்குதலைத் தொடுக்கிறது. இதுவரையிலும் செயல்பட்டு வந்த சாதிச் சங்கங்களில் தொய்வு ஏற்பட்ட சமயத்தில் கொடியங்குளம் தேவேந்திரர்கள் மீது 1995ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைக்குப் பின்னர் அவர்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்த புதிய தமிழகம் கட்சியில் அம்மக்கள் இணைந்தனர். தற்போது பாமகவின் பொதுச் செயலாளர் பதவியிலிருக்கும் தேவேந்திரர் சாதியைச் சேர்ந்த வடிவேல் ராவணன் பல வருடங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து வெளியேறியபோது பாமகவினால் தங்கள் சாதிக்கு பலன் ஏதும் கிடைத்துவிடவில்லை என்பதை, ‘சாறை உறிந்துவிட்டு சக்கையை தேவேந்திரர் மீது எறிந்தது பாமக’ என்று விமர்சித்தார்.26 தேவேந்திரர் சங்கத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் பாமகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அதில் தொங்கு சதையாக இருக்க விரும்பாததால் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனர். தற்போது பாமக தலித் வெறுப்பரசியலை கையிலெடுத்ததால் பாமகவின் திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பில் இருந்த தேவேந்திரர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.27 ஒரு சாதிக் கட்சியிலிருந்து மாற்றுச் சாதியைச் சேர்ந்தவர்கள் விலகும்போது ஏற்படும் சிக்கல்களைவிடவும் அதே சாதியைச் சேர்ந்தவர்கள் விலகும்போதுதான் பெரும் மோதல்கள் உருவாகின்றன. 

மேலும் படிக்க : 

http://www.kalachuvadu.com/issue-164/page16.asp

சாதி கட்சிகள்...

சாதி கட்சிகள்...

தமிழக அரசியல் அரங்கில் ஆளும் கட்சி அல்லது எதிர் காட்சிகளில் எண்ணற்ற பிரதிநிதிகளாக தன் சாதிகாரர்களை M.LA க்களாகவும் MP க்களாகவும் அமைச்சர்களாகவும் கொண்ட சாதிகள் எல்லாம் தன் சாதிக்கென்று தன் சாதி மக்களின் பலத்தை மட்டுமே நம்பி ஆரம்பித்த சாதி கட்சிகலான நாடாளும் மக்கள் கட்சி (தேவர்), மக்கள் தமிழ் தேசம் (கோனார்), கொங்கு முன்னேற்ற கழகம் (கவுண்டர்), போன்ற அக்கட்சிகள் எல்லாம் இருந்த இடமும் தெரியவில்லை போன தடமும் தெரியவில்லை மற்ற சாதி கட்சிகளான விடுதலை சிறுத்தைகளும் (பறையர்), பாட்டாளி மக்கள் கட்சியும்(வன்னியர்) கூட அந்த சமூக மக்களின் ஆதரவை இழந்து அழிவை நோக்கியே பணித்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்துக்க்கொண்டிருக்கிறோம். இன்னும் பல சிறு சாதிகளின் கட்சிகள் அடையாளம் இன்றி வந்த வேகத்தில்அழிந்த கதைகளையும் யாம் அறிவோம்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை விட பொருளாதராத்தில் அரசியலில் சமூகத்தில் உயர்நிலையில் இருக்கும் பறையரை தவிர்த்து மற்ற சாதிகளின் ஒருங்கினைந்த ஒரே அணி என கூறிக்கொண்ட கட்சிகளே துடைத்து தூக்கி எறியப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தமிழக அரசியல் களத்தில் எம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் எத்தனை கட்சிகள் என்று எண்ணி சொல்ல முடியவில்லை அவ்வளவு கட்சிகளை வைத்துகொண்டு ஆளாளுக்கு அவர் ஆதரவாளர் இவர் ஆதரவாளர் என மோதிக்கொள்ளும் இந்த கேடுகெட்ட சமுதாயதிற்கு எப்படி அரசியலில் அங்கீகாரம் கிடைக்கும் சொல்லுங்கள் சொந்தங்களே...

படிக்காத பாமரன் தான் மோதுகிறான் ஆதரவாளன் என்ற பிரிவினையை உருவாக்கி ஆனால் அவர்களிற்கு ஒரு படி மேலாய் மெத்த படித்த மேதாவிகளாய் சண்டியர்கலாய் காலரை தூக்கி திரியும் பல எம் சமூக சிந்தனையுள்ள படித்த பண்பாளர்களளான எதிர்வரும் காலங்களில் எம் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களான பல மாற்றத்தை உருவாக்க வேண்டியவர்களான எம் சமூக அறிவு ஜீவிகள் எல்லாம் எம் சமூகத்தை ஒற்றுமைபடுத்தி ஒருநிலைப்படுத்த முயலாமல் எம் சமூகத்திற்குள் சிலரின் ஆதரவாளர்கள் என மேலும் பிரிவினையை தூண்டுவது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்கள் சொந்தங்களே... 

40 வயதை கடந்தவர்கள் நாசமாய் போனாலும் பரவா இல்லை இருபது வயதை எட்டாதவர்கள் இருக்கட்டும் அப்படியே இதற்க்கு இடைப்பட்ட வயதினர் எல்லாம் சமூக சிந்தனையோடு எம் சமூகமும் மதிக்கப்படும் சமூகமாக மாற வேண்டும் அரசியலில் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு நல்ல குறிக்கோள்களை நெஞ்சில் சுமந்து கொண்டு ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாய் இணைந்தாலே போதும் இருக்கும் தலைவர்களை அமைச்சர்களாக்கலாம் அப்படி இல்லையா எம் சமூகத்தில் எண்ணற்ற அமைச்சர்களை உருவாக்கலாம்.

100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை வல்லரசாக்குகிறேன் என்றார் விவேகாந்தர் இந்தியாவை வல்லரசாக்கவே 100 பேர் போதும் என எண்ணும் போது எம் சமூகத்தை வல்லரசாக்க எத்துனை பேர் வேண்டும்? சிந்தனை திறனுள்ள சொந்தங்கள் உங்கள் பகுதிகளில் நீங்களே இணைந்து சமூக பணியாற்ற தொடங்குங்கள் யாரையும் எதிநோக்காமல் எந்த வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டீர்கலானால் எதிர் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஆற்றிய சமுதாய பணிக்கான வினைபலன் பிரதிபலிக்கும் அது தான் எம் சமூகத்திற்கு கிடைக்கபோகும் முதல் வெற்றி. தொடங்குங்கள் நண்பர்களே இன்றே உங்கள் சமுதாய பனியனை எதிவரும் காலம் எமதாகட்டும். 

“Everything is doable in this world” மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தையே மாற்றும் திறன் எம் குல இளைஞர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்த இன்றிலிருந்தே துவங்குங்கள் உங்கள் சமுதாய பணியை மாறும் எல்லாமே மாறும் நாளைய தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் நாமாக இருப்போம் எல்லா கட்சிகளின் அசைக்க முடியாத பிரதிநிதிகளாய் எம் சமுதாய சொந்தங்கள் உருவெடுக்கும் போது மற்ற சாதிகளில் எப்படி அந்த சாதியின் கட்சிகள் எல்லாம் காணாமல் போனதோ அது போல் எம் சமூகத்திலும் நிகழும் அன்று எம் சமூகம் அரசியல் அரங்கில் அசைக்க முடியா சக்தியாக திகழும். 

இணைய தொடங்குங்கள் இன்றே ஆளும் கட்சிகளான ஆ.தி.மு.க - தி.மு.க, காங்கிரஸ் – பி.ஜே.பி போன்ற முதுபெரும் ஆளும் கட்சிகளில் அப்போது தான் ஆளும் சக்தியாக உருவெடுக்க முடியும். எல்லோரும் சொல்லுவார்கள் எம் சமூக சொந்தங்களை யாரும் ஏற்றுக்கொலாமல் ஒதுக்குவார்கள் என்று இன்று இணையபோகும் நீங்கள் காட்டுங்கள் மாற்று சமுகாத்தானுக்கும் எம் சமூகத்தின் குறுகிய மனப்பான்மை கொண்டோருக்கும் நாம் எவ்வளவு பெரிய ஆதிக்க சக்தியென்று.


-- ராம் மள்ளர் 

Thursday 15 August 2013

தொன்று தொட்டு வாழ்ந்த என் தேவேந்திர குல மக்கள் மள்ளர்



தொன்று தொட்டு வாழ்ந்த என் தேவேந்திர குல மக்கள் மள்ளர் என்ற பட்டதோடு வாழ்ந்து அழைக்கப்பட்டவர்கள் தான் தேவேந்திர குலத்தார்கள்,

இந்திர வம்சத்தில் பிறந்த தன்னுடைய மக்களை சிறுபான்மையாக்கி தாழ்த்தபட்டவனாக்கி நசுக்கபட்டவனாக்கி என்று அரசியல் சூழ்ச்சியில் அடிமைப்பட்டு சின்னாபின்னாமாக்கி சிதறிக்கிடந்த என் சொந்தங்களை எல்லாம்,பரவலாககிடந்தவர்கலை எல்லாம் பல பிரிவுகளாய் பிரிந்தவர்களை எல்லாம்,ஒரு காலத்தில் பள்ளர் என்று தான் அழைக்கபட்டார்கள் 

அந்த பள்ளர்களை எல்லாம் நாம் யார் எப்படிப்பட்ட வம்சத்தில் பிறந்தவர்கள் என்று தெரு தெருவாக,வீதி வீதியாக கிட்ட தட்ட 5.00000 கிராமங்களுக்கு சென்று வெளிப்படுத்தி,உட்பிரிவுகள் பல பிரிவுகள் அம்மா பள்ளன்,அய்யா பள்ளன்,கோழி பள்ளன்,சோழி பள்ளன்,வாதிரியர் பள்ளன்,இப்படி கணக்கு பள்ளன்,இப்படி சொல்லி பல பிரிவுகளை எல்லாம் தேவேந்திர குலத்தார் என்று ஒருங்கிணைத்து ஒருதாய் மக்களாக திகழவைத்து இவர்களை எல்லாம் தேவேந்திர குலத்தார்கள் என்று சொல்லகூடிய பெருமையை ஏற்றி வைத்தவன் நான் என்று யாராலும் மறக்க முடியாது,


இந்த விதைக்கு பயிர் வைத்தது ஜான்பாண்டியன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திகழ்ந்தவர் அண்ணன் ஜான்பாண்டியன்.

-- மாமள்ளன்

Monday 12 August 2013

சிந்திப்பதற்கு!



ஒரு வட இந்திய ஊடகவியலாளருடன் வேண்டுகோளுக்கு இணங்க தியாகி இமானுவேல் சேகரனார் சமாதியையும் பசும்பொன் முத்துராமலிங்கம் சமாதியையும் அவர்களிற்கு காண்பிப்பதற்காக அவர்களுடன் நானும் சென்றேன் அந்த அனுபவத்தை சமூக சொந்தங்களுடன் பகிர எண்ணுகிறேன்....

முதலில் யாம் சென்றது எம் குல கடவுள் தியாக தீபம் இமானுவேல் சேகரனாரின் சமாதிக்கு யாருமற்ற இடத்தில அய்யா அமைதியாக உறங்கும் அந்த இடத்தை காண்பித்தேன் அவரும் புகைப்படம் எடுத்துகொண்டு சிலவற்றை அவரது நோட்டில் எழுதிகொண்டார் ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்குள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

அடுத்தாக பசும்பொன் போகலாம் என்றார் எனக்கு தயக்கம் அதை அறிந்துகொண்ட அவர் உங்களை யாரிடமும் நீங்கள் யார் என்று அடையாள படுத்தாமல் எங்களுடன் வந்த சக ஊடகவியலாளர் என்று சொல்லிகொள்ளலாம் வாருங்கள் என்று அன்புகட்டளை இட்டார் அதை ஏற்று அங்கேயும் சென்றேன்... அங்கேயும் புகைப்படங்களை எடுத்துகொண்டு நோட்டில் பலவற்றை குறித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது ஆம் அவர்களின் ஆதிக்க புத்தியை முத்துராமலிங்கத்தின் சமாதி பிரதிபலித்தது...

முறையான சமாதி சமாதிக்கு மேல் முத்துராமலிங்கத்தின் சிலை சமாதியை சுற்றி கிரில் சுட்றமைக்கப்பட்ட கம்பிஜன்னல் அதற்க்கு மேல் கோவில் பிரகாரம் போல் பூஜைக்கான அனைத்து சிறப்பமசதுடன் முத்துராமலிங்கத்தின் நினைவிடம் கும்பம் கொண்ட முத்துராமலிங்க தேவர் போற்கோவில் என்று அந்த சமூக மக்கள் வழிபடும் வழிபாடு தளமாகவே விளங்குகிறது.

அந்த சமாதியை சுற்றி முத்துராமலிங்கத்தின் வீடு, முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை வரலாறு, அவர் பேசிய உரை, தலைவர்களுடன் சந்தித்த புகைப்படம் என்று ஒருகட்டிடம் முத்துராமலிங்கத்தை பெரிய தலைவர் போல் சித்தரித்து காட்டுகிறது. அதை சுற்றியுள்ள கட்டிடங்கள் அனைத்தும் தமிழக முதல்வர்களான ஜெயலலிதாவாலும், கலைஞர் கருணாநிதியாலும் முறையே அடிக்கள்நாட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது அந்த கட்டடத்திற்கான நிதியை வழங்கியவர்கள் அந்த சாதி மக்கள் அல்ல அந்த தொகுதி M.L.A & MP யுமே.

அரசியல் அங்கீகாரம் பெற்றால் தான் இவை அனைத்தும் எம் சமூகத்திற்கும் சாத்தியம் என்பதை என் மனதிற்குள் நினைத்துகொண்டு திரும்பி வந்துகொண்டிருகையில் அந்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி என்னை சிறிது நிலைகுலைய செய்தது என்றால் மிகையாகாது.

ஆம் அவர் கேட்டார் ஏன் தம்பி நீங்க தேவர் சமூகத்தைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை ஆணித்தரமாக என்னுடன் விவாதித்தீர்களே நீங்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கும் உங்கள் தலைவர் இம்மனுவேலுவின் சமாதிக்கும் முத்துராமலிங்கத்தின் சமாதிக்கும் உள்ள வேறுபாடே உங்களை குறைத்து மதிப்பிட செய்கிறதே என்றார்.

உண்மையில் நான் அவரின் கேள்விக்கு தடுமாறிவிட்டேன் பின் சுதாரித்துக்கொண்டு அவரிடம் கூறினேன் எங்கள் தலைவர் மக்களின் தலைவர், போராளிகளின் தலைவர், எங்கெல்லாம் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறதோ அங்கே அவரின் ஆன்மாவாய் எம் சமூகம் முன்னிற்கும் அப்பேற்பட்ட அப்பூர்வ தலைவர் எங்கள் அய்யா இம்மானுவேல் சேகரன் அதனால் தனித்து உறங்காமல் எம்மக்களோடு மக்களாக சக போராளியாய் உறங்கிகொண்டிருக்கிறார் என்றேன் மனிதர் ஆடிபோனார் ஒன்றும் பதில் சொல்லாமல் என்னுடைய கருத்தையும் ஏற்று குறித்துக்கொண்டு பிரியா விடை பெற்றார்.

சிந்திப்பதற்கு:- நாமும் அய்யாவின் போராட்ட வரலாற்றையாவது சமாதியின் அருகில் நிறுவினால் நன்றாக இருக்கும். வேறு என்னவெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து அதை செவ்வனே செய்து முடித்தால் நன்றாக இருக்கும்.

-- ராம் மள்ளர்